Tuesday, February 28, 2017

விலை போகாப் பொருளானோம்...


பூமியொரு பெண்ணென்றீர்
உம் காலடியில் மிதிபடவோ?
நதிகளெல்லாம் பெண்ணென்றீர் உம் இஷ்டப்படி வளைப்பதற்கோ?
நிலவு ஒரு பெண்ணென்றீர்
வாழ்வின் துன்பமதில் தேய்வதற்கோ ?
பெண்களே பூக்களென்றீர்
வாடி நிதம் வதங்கிடவோ?
தெய்வங்களும் பெண்ணென்றீர் வெறும்
காட்சிப் பொருள் ஆவதற்கோ?
பெண்ணென்றால் செல்வமென்றீர் ஒரு விலைபேசி வாங்கிடவோ?
பெண்பார்க்க வந்திடுவார்
பலகாரம் புசித்திடுவார்
சொல்லி அனுப்புகிறோம் என்று சொல்லாமலே இருந்திடுவார்
தரகரின் பல்லிளிப்பின்
அர்த்தம் புரிந்ததனால்
பெற்றவரின் ஏக்கத்தை
புரியாத சிறுபெண்ணா நான்
காலக் கணக்கினிலே
வயதோ கடந்துவிடும்
கண்ணாடி முன்னின்று
என் தங்கையவள் முகம் பார்த்தால்
நெஞ்சில் இடியாய் இறங்கி
புது ஏக்கமான்று வந்துவிடும்
எங்களுக்கும் உள்ளமொன்று உள்ளதென்று யாருணர்வார்?
சீதனச் சந்தையிலே
விலை குறைத்து வாங்கிடவே
யார்வருவார்?


         சோபிகா. வி

No comments:

Post a Comment